தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘கோட்’ (G.O.A.T. – The Greatest All of Time) திரைப்படத்தின் முதல் தனிப் பாடல் இன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘விசில் போடு’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்தப் பாடலை விஜய் பாடியுள்ளதுடன் அவருடன் இணைந்து வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி ஆகியோரும் குரல் கொடுத்துள்ளனர்.
பாடல் வரிகளை மதன் கார்கி எழுதியுள்ளதுடன் யுவன் சங்கர் ராஜாவின் அசத்தல் இசையில் இரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது இந்தப் பாடல்.
விஜய், அண்மையில் அரசியல் வருகையை உறுதிப்படுத்தி கட்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அந்த அரசியல் வருகைக்கு விசில் போடும் வகையில் இந்த்ப பாடல் அமைந்துள்ளமையும் குறிப்பிடக்கூடியது.
”ஏ பார்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கௌப்பட்டுமா
கம்பெய்னதான் தொறக்கட்டுமா
மைக்க கையில் எடுக்கட்டுமா
இடி இடிச்சா என் வொய்சு தான்
வெடி வெடிச்சா என் போய்சு தான்
குடிமக்க தான் நம் கூட்டணி
பார்ட்டி விட்டுதான் போமாட்ட நீ
சத்தம் பத்தாது விசில் போடு
குத்தம் பார்க்காம விசில் போடு
ரத்தம் பத்தட்டும் விசில் போடு
ஏ நண்பி, ஏ நண்பா ஹெய் விசில் போடு
ஜி.ஓ.ஏ.ரி.க்கு விசில் போடு
ஓட்டோமற்றிக்கா விசில் போடு
ட்ராகன் வேட்டைக்கு விசில் போடு
ஏ நண்பி, ஏ நண்பா ஹெய் விசில் அடி என்னோடு” என்று தொடங்கும் பாடலின் வரிகள் இரசிகர்களை விசில் போட வைத்துள்ளது.
பாடல் இணைப்பு:
Discussion about this post