சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள ‘தலைவர் 171’ திரைப்படத்தின் தலைப்புடன் கூடிய டீசர் காட்சி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்திற்கு, ‘கூலி’ என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் ரஜினியின் அதிரடி சண்டைக் காட்சி மற்றும் வசனங்களுடன் வெளியாகியுள்ள காணொளி, படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் ‘லியோ’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து, ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாபெரும் வெற்றிப் படமொன்று எதிர்பார்க்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கூலி’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். அத்துடன், ஏனைய நட்சத்திரங்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
தற்போது, ரஜினிகாந்த் – ஞானவேல் கூட்டணியில் உருவாகிவரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
காட்சி இணைப்பு:
Discussion about this post