திகில் திரைப்படங்களில் பெரிய வெற்றி பெற்ற ‘ஈரம்’ திரைப்பட இயக்குநரின் அடுத்த படைப்பான ‘சப்தம்’ திரைப்படத்தின் டீசர் காட்சி இன்று வெளியாகியுள்ளது.
திகில், மர்மம், பேய் கதைக்களத்தில் ‘சப்தம்’ உருவாகியுள்ளதுடன் திகில் நிறைந்த காட்சிகளுடன் வெளியாகியுள்ள டீசர் காட்சி படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக தமனின் இசையில் ஒவ்வொரு காட்சிகளுக்குமான சப்தம், படத்திற்கு வலுச்சேர்த்துள்ளமை தெரிகிறது.
இந்தப் படத்தில், ஆதி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், 90களின் நாயகிகளான சிம்ரன், லைலா உட்பட லக்ஸ்மி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ரஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
7ஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக 7ஜி சிவா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படம், இந்தக் கோடை விடுமுறைக்குத் திரையரங்குகளில் வெளியாகிவுள்ளது.
டீசர் காட்சி இணைப்பு:
Discussion about this post