தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் டீசர் காட்சி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
2021இல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்த ‘புஷ்பா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்தப் படம் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.
அதிரடிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், வித்தியாசமான தோற்றங்களில் அல்லு அர்ஜுன் நடித்திருப்பதுடன் சேலை அணிந்து பெண் உருவத்தில் தாண்டவம் ஆடும் காட்சியுடன் வெளியாகியுள்ள டீசர் காட்சி அந்த எதிர்பார்பை மேலும் அதிகரித்துள்ளது.
அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ், பகத் பாசில் மற்றும் சுனில் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
காட்சி இணைப்பு:
Discussion about this post