தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 2024 தை 12ஆம் திகதி கேப்டன் மில்லர் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் கொண்டாட்டமாக தை 12 முதல் 16ஆம் திகதி வரையான தொடர் விடுமுறையில் வெளியாவதால் வசூல் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளதுடன் படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதிரடிக் கதைக்களம், போர்க்களக் காட்சிகள், தனுஷின் மிரட்டல் தோற்றம் என ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் காட்சி அண்மையில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
இதுவரை பார்த்திராத தனுஷ், ஹொலிவூட் தரத்தில் களக்காட்சிகள் என தனுஷை வைத்து மிரட்டியிருக்கிறார் இயக்குநர். அத்துடன், போர்க் களத்தில் போராளியாக மாறிய பிரியங்கா மோகன் மற்றும் தனுஷின் ஆயுதக் குழுவும் மிரட்டியிருக்கிறது.
இந்தப் படத்தில், தனுஷூக்கு நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளதுடன் நிவேதிதா சதீஷ், ஜோன் கொக்கன், விஜயகுமார், சிவராஜ்குமார் உ்ள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘சாணிக் காகிதம்’ ‘ராக்கி’ திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அறிவிப்பு இணைப்பு:
U/A certificate #CaptainMiller 😎
KIDS, YOUTH & FAMILIES get ready for the biggest Action Extravaganza #CaptainMillerPongal 🔥🔥
JANUARY 12th,2024 Blasting Theatres Worldwide@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @saregamasouth pic.twitter.com/ox4lg5x21c
— Sathya Jyothi Films (@SathyaJyothi) December 29, 2023
Discussion about this post